திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி அனைவரும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்ற வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் தெரிவித்தார்.



தூத்துக்குடி திமுக அமைப்புகளை மறுசீரமைப்பது தொடர்பாக வடக்கு மாவட்ட திமுக அவசர செயற்குழு கூட்டம் எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ. க்கள் மார்க் கண்டேயன், கருணாநிதி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



கூட்டத்தில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கீதாஜீவன் பேசியதாவது:



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிற்கிணங்க இந்தக் கூட்டம் நடைபெறுகிறது. இது அனைவருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாகும். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி, தலைமைக் கழகத்தின் உத்தரவுகளை ஏற்று செயல்பட வேண்டும். தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையவும், தளபதியாரை மீண்டும் முதலமைச்சராக்கவும் அனைவரும் இணைந்து பாடுபட வேண்டும் என்றார். தலைமைக் கழகத்தால் பிரதிநிதிகளாக அறிவிக்கப்பட்ட நல்லசேதுபதி மற்றும் தமிழ் கா. அமுதரசன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.



கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், ஆறுமுகம், ஏஞ்சலா, மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், மாநில மீனவரணி துணைச் செயலாளர் புளோரன்ஸ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மாநகர துணைச் செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், பிரமிளா, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



மேலும் ஒன்றிய செயலாளர்கள் சின்னபாண்டியன், சுப்பிரமணியன், கருப்பசாமி, முருகேசன், செல்வராஜ், மும்மூர்த்தி, ராதாகிருஷ்ணன், சின்ன மாரிமுத்து, ராமசுப்பு, காசி விஸ்வநாதன், நவநீதகண்ணன், ஜெய கண்ணன், இம்மானுவேல், நகர செயலாளர் ரமேஷ் மற்றும் மாவட்ட, மாநகர அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பகுதி செயலாளர்கள், மாநகர அணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



இதில் மாவட்ட அணி அமைப்பாளர்கள் மதியழகன், அபிராமிநாதன், கவிதாதேவி, அந்தோணி ஸ்டாலின், சீனிவாசன், ராமலட்சுமி, வழக்கறிஞர் குபேர் இளம்பரிதி, அசோக், துணை அமைப் பாளர்கள் அருணாதேவி, பிரபு, நாகராஜன், அந்தோணி கண்ணன், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், ரவீந்திரன், ஜெயக்குமார், மேகநாதன், ராமகிருஷ்ணன், மாநகர அணி நிர்வாகிகள் ஜீவன் ஜேக்கப், ரவி, அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், பாஸ்கர், மணி, முரளிதரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.