தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் சந்தை ரோடு பகுதியில் விரைவில் தொடங்கவுள்ள வடிகால் பணிகள், மேலும் பிஎம்சி பள்ளி முதல் பக்கிள் ஓடை வரை முழு தீவிரமாக நடைபெற்று வரும் பணிகளைத் தாமாகவே நேரில் சென்று பார்வையிட்டார் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி அவர்கள்.
மழைக்காலத்தில் தண்ணீர் தேக்கம் ஏற்படாமல் மக்கள் எளிதில் இயங்குவதற்காக வடிகால் பணிகள் எவ்வாறு நடைமுறையில் உள்ளன என்பதை ஆய்வு செய்தபோது, அதிகாரிகளிடம் பல்வேறு ஆலோசனைகளையும் மேம்படுத்த வேண்டிய வழிமுறைகளையும் மேயர் வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன், பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ் குமார், வட்ட கழக செயலாளர் பொன்ராஜ், மாமன்ற உறுப்பினர் பேபி ஏஞ்சலின் ஆகியோர் இணைந்து பங்கேற்றனர்.
மக்களின் தினசரி வாழ்வை எளிதாக்கும் விதத்தில் இப்பணிகள் விரைவாக முடிவடைய உறுதி அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் வடிகால் பணிகள் – மக்களின் நலனுக்காகக் களமிறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ எம்.சி. சண்முகையா முன்னிலையில் “உங்களுடன் ஸ்டாலின்” சிறப்பு முகாம்!!
அடுத்த
ஒட்டப்பிடாரம் எம்எல்ஏ சண்முகையா, அமைச்சர் அனிதா ஆர். ராதாகிருஷ்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்து!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026