அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தொடங்கப்பட்டு 54 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
1972ஆம் ஆண்டு எம்ஜிஆர் அண்ணா உருவம் பொறித்த கொடியை அறிமுகப்படுத்தி கட்சியை தொடங்கியவர். அதன் பிறகு தமிழக மக்களுக்காக உயிர்நாளின் இறுதி வரை பாடுபட்டார். அவரின் வழியினைப் பின்பற்றி ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசியலிலும் ஆட்சியிலும் தனித்துவமான முத்திரையை பதித்தது. தற்போது 3-ம் தலைமுறையாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி வலுவாக முன்னேறி வருகிறது.
அவரது உத்தரவின்படி, தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் டூவிபுரத்தில் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பின்னர் தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் லட்டு வழங்கப்பட்டது.
பின்னர் வடக்கு பகுதி அதிமுக செயலாளர் ஜெய்கணேஷ் தலைமையில் நடைபெற்ற நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், 100 பேருக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞரணி துணைச்செயலாளர் பிரபு, முன்னாள் மேயர் அந்தோணி கிரேஸி, அமைப்பு சாரா ஓட்டுரணி இணைச் செயலாளர் பெருமாள் சாமி, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், மாணவரணி செயலாளர் விக்னேஷ், எம்ஜிஆர் மன்ற செயலாளர் பெருமாள், சிறுபாண்மை அணி செயலாளர் பிரபாகர், மாவட்ட பிரதிநிதி விஜயன், பகுதி செயலாளர்கள் முருகன், சேவியர், ஒன்றிய செயலாளர் காசிராஜன், எம்ஜிஆர் மன்ற துணைச்செயலாளர்கள் சத்யா லெட்சுமணன், மிக்கேல், ரமேஷ், கிருஷ்ணன், வக்கீல்கள் ஆண்ட்ரூமணி, முனியசாமி, சரவணபெருமாள், சுகந்தன் ஆதித்தன், வட்டச்செயலாளர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி, சொக்கலிங்கம், ஈஸ்வரன், அந்தோணிராஜ், பகுதி துணைச்செயலாளர் கணேசன், முன்னாள் கவுன்சிலர்கள் சாந்தி, மெஜிலா, டேவிட் ஏசுவடியான், சந்தனபட்டு, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் ஆகியோர் உட்பட பல்வேறு அணியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டு எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் மரியாதை செலுத்தினர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் அதிமுக 54-வது ஆண்டு விழா – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
எம்ஜிஆர் வழியில் மீண்டும் நல்லாட்சி — தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் மரியாதை!!
அடுத்த
தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறிய ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் – மழைநீர் தேக்கம் காரணமாக மீறல் வெளிச்சம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026