வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தூத்துக்குடி மாநகரில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து மழைநீர் தேங்கியிருந்தது. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பெரும்பாலான இடங்களில் மழைநீரை அகற்றியது. பல பகுதிகளில் நீர் தானாகவே கடலுக்கு சென்றது. ஆனால் மூன்றாம் மைல் பகுதியில் மழைநீர் செல்லாமல் தேங்கியிருந்தது.
இதையடுத்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் ப்ரியங்கா ஆகியோர் அதிகாரிகளுடன் இணைந்து நேரில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின் போது, பாலிடெக்னிக் எதிர்புறம் உள்ள ஒரு பிரபல ஹோட்டல், இறைச்சி கழிவுகள் மற்றும் மனித கழிவுகளை செப்டிக் டேங்க் அமைக்காமல் நேரடியாக கழிவுநீர் கால்வாயில் விட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதன் காரணமாக சுமார் 30 அடி நீளத்திற்கு கழிவுநீர் கான் அடைப்பு ஏற்பட்டது.
நகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா ஆலோசனையின்படி, மேற்கு மண்டல சுகாதார அலுவலர் ராஜபாண்டி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சிமெண்ட் பிளேட்டுகளை அகற்றினர். அதில் மனித மற்றும் இறைச்சி கழிவுகள் பாறை போல உறைந்து தேங்கி இருந்தது தெரியவந்தது. சுமார் ஒரு லாரி அளவுக்கு கழிவுகள் அப்புறப்படுத்தப்பட்டன.
இதனை தொடர்ந்து, மாநகராட்சி நிர்வாகம் அந்த ஹோட்டலுக்கு ரூ.25,000 அபராதம் விதித்தது. மேலும், இதுபோன்ற சட்டவிரோத செயலில் மீண்டும் ஈடுபட்டால், ஹோட்டல் நிரந்தரமாக மூடப்படும் என சுகாதார அதிகாரிகள் எச்சரித்தனர்.
இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்ததாவது “தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட திருமண மண்டபங்கள், ஹோட்டல்கள் ஆகியவை மனித கழிவு, இறைச்சி கழிவு போன்றவற்றை நேரடியாக கழிவுநீர் கால்வாய்களில் விடக்கூடாது. இதனை மீறும் நிறுவனங்களுக்கு கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தனர்.
தற்போது மாநகராட்சி நிர்வாகம் இத்தகைய மீறல்களை தடுக்க தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகிறது. இதனை பொதுமக்கள் பெரிதும் வரவேற்று பாராட்டுகின்றனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் விதிமுறைகளை மீறிய ஹோட்டலுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் – மழைநீர் தேக்கம் காரணமாக மீறல் வெளிச்சம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அதிமுக 54-வது ஆண்டு விழா – முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை!!
அடுத்த
தூய மரியன்னை கல்லூரியில் மாநில அளவிலான கருத்தரங்கு: “பசுமையான, பாதுகாப்பான எதிர்காலத்திற்கான காலநிலை நடவடிக்கைகள்” குறித்து விழிப்புணர்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026