தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதி பல்க் ஜங்ஷன் பிள்ளையார் கோயிலில் வைத்து (20.7.2025) ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 7 மணி அளவில் புரட்சி பாரதம் கட்சியின் தேசிய தலைவரும் கே.வி. குப்பம் சட்டமன்ற உறுப்பினருமான இளம் புரட்சியாளர் பூவை டாக்டர் எம். ஜெகன் மூர்த்தியார் ஆணைகேற்ப புரட்சி பாரதம் கட்சியின் முதன்மை செயலாளர் டி. ருசேந்திர குமார் புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் பரணி P. மாரி ஆகியோர்களின் வழிகாட்டுதலின்படி,
தூத்துக்குடி மாநகர் மாவட்ட புரட்சி பாரதம் கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் மாவட்ட இணை செயலாளர் சி. எட்வின் ஜோசப் மாவட்ட செய்தி தொடர்பாளர் மு. மணிகண்டன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் S. சிறு லட்சுமி மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் மைக்கேல் ராஜ் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் APLF அம்பேத்கர் மக்கள் விடுதலை முன்னணி இணைச் செயலாளர் S. கணேசன் வரவேற்புரை ஆற்றினார். கூட்டத்தில் சில முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் இளம் புரட்சியாளர் டாக்டர் பூவை M. ஜெகன் மூர்த்தியார் MLA கையொப்பமிட்ட பதவிக்குண்டான சான்றிதழ்கள் கட்சியின் நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் வழங்க வேண்டும்.
2. கட்சிக்கு புதிய நிர்வாகிகள் உறுப்பினர் சேர்க்கை ஆலோசனை கூட்டத்தின் போது நடைபெற்றது.
இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு கட்சி தலைமைக்கு மாவட்ட செயலாளர் அவர்கள் மூலம் பரிந்துரை செய்ய வேண்டும்.
3. வருகின்ற சட்டமன்ற தேர்தலில் புரட்சி பாரதம் கட்சி கூட்டணி வைக்கின்ற கட்சியின் தூத்துக்குடி சட்டமன்ற வேட்பாளரை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என இந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தொழிற்சங்க செயலாளர்
V. சிவனனைந்த பெருமாள் மாவட்ட பொறியாளர் துறை இணைச் செயலாளர் T. மகேந்திரன் மாவட்ட வணிகர் அணி செயலாளர் A. சுடலை மாடன் மாவட்ட மகளிர் அணி துணைச் செயலாளர் A. தீப சித்ரா தூத்துக்குடி மாநகர 59 வார்டு வட்டச் செயலாளர் R. சூசை மாணிக்கம் 59 வது வார்டு வட்ட தலைவர் T. ராஜா 59 வது வார்டு வட்ட பொருளாளர் முனீஸ்வரன் 54 வது வார்டு வட்ட செயலாளர் M. மதி ஜூலியட் 49 வது வார்டு வட்டச் செயலாளர் ஐகோர்ட்ராஜா உட்பட பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நிர்வாகிகளுக்கு மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் பதவிக்குண்டான சான்றிதழ்களை வழங்கி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கருத்துரைகள் வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம்!!
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடி மதிமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் சார்பில் சங்கொலி சந்தா தொகையை எம்பி துரை வைகோவிடம் வழங்கல்!!
அடுத்த
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்ட ஸ்டெர்லைட் ஆதரவாளர்களுக்கு மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணா தேவி ரமேஷ் பாண்டியன் கடும் கண்டனம்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026