இந்தியா முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி விழாவை இந்துக்கள் விமரிசையாகக் கொண்டாடினர். தமிழகத்திலும் அனைத்து மாவட்டங்களிலும் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிறுவர், சிறுமிகள் கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமணிந்து கோவில்களுக்குச் சென்று வழிபட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.



அதன்படி, தூத்துக்குடி மேலூர் பங்களா தெருவில் அமைந்துள்ள ஸ்ரீ கோகுல கிருஷ்ணன் திருக்கோவிலில் 52வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி மற்றும் உறியடி உற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது.
விழாவையொட்டி கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமணிந்த ஏராளமான சிறுவர், சிறுமிகள் கோவிலுக்கு வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.



வண்ணமயமான ஆடைகளில் குழந்தைகள் கலந்து கொண்டது பக்தர்களை வெகுவாகக் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து, கிருஷ்ணன் மற்றும் ராதை வேடமணிந்த சிறுவர், சிறுமிகளுக்கு கோவில் நிர்வாகிகள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். கிருஷ்ண ஜெயந்தி விழா பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்புடன் மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றது.