அதிமுக கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை, அதிமுக வர்த்தக அணி சார்பில் தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் வழங்கி ஆதரவு திரட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.


இந்த நிகழ்ச்சியில், அதிமுக வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லப்பாண்டியன் அவர்கள் தலைமையில், பழைய பேருந்து நிலையம், பால விநாயகர் கோயில் தெரு, சிதம்பர நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டு, வரும் சட்டமன்றத் தேர்தலில் புரட்சித்தமிழர் எடப்பாடியார் அவர்களை முதல்வராக்க ஆதரவு கோரப்பட்டது.


நிகழ்வில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணை செயலாளர் சந்தனம், மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் U.S.சேகர், தெற்கு மாவட்ட வர்த்தக அணி செயலாளர் துரைசிங், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் P.T.R.ராஜகோபால், வடக்கு மாவட்ட அம்மா பேரவை துணைச் செயலாளர் தருவை அமலதாசன் (பழம்), முன்னாள் நகர் மன்ற தலைவர் மனோஜ், முன்னாள் மாவட்ட மீனவரணி செயலாளர் அகஸ்டின் Ex.MC, முன்னாள் மத்திய கூட்டுறவு பண்டகசாலை தலைவர் எட்வின் பாண்டியன் Ex.MC, முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜா ராம், மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் சண்முத்தாய், முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ரத்தினம், Ex. மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் சகாயராஜ் Ex.MC, வட்ட செயலாளர்கள் சகாயராஜ், அருண், முன்னாள் எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் தெர்மல் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் மாவட்ட பிரதிநிதிகள் அசரியான், ஜேடியம்மா, சாந்தி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் அனிஸ்டஸ், அபுதாஹிர் மற்றும் தருவை ராஜா, அந்தோனி செல்வராஜ், மணிகண்டன், ஜோதிகா மாரி, நயினார், சுப்புராஜ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.


இந்நிகழ்ச்சியின் போது, தூத்துக்குடி ரயில்வேயில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்து வரும் R.மீனாட்சி அவர்கள், ரயில்வே பணியின்போது குப்பைத் தொட்டியில் கண்டெடுத்த சுமார் 35 பவுன் தங்க நகைகளை நேர்மையுடன் ரயில்வே உயர் அதிகாரிகளிடம் ஒப்படைத்ததை பாராட்டி, அவருக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவப்படுத்தப்பட்டது. பின்னர் அந்த நகைகள் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டன.