தூத்துக்குடி ஒருங்கிணைந்த அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனின் பிறந்தநாளை முன்னிட்டு, டூவிபுரத்தில் உள்ள அதிமுக அலுவலகத்தில் பிறந்தநாள் விழா நடைபெற்றது.



விழாவில் எஸ்.பி. சண்முகநாதன் கேக் வெட்டி, அங்கு கலந்து கொண்ட அனைவருக்கும் கேக் வழங்கினார். தொடர்ந்து, பகுதி செயலாளர் ஜெய்கணேஷ் ரோஜாப்பூ மாலை அணிவித்து, வீர வாள் வழங்கி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.



நிகழ்ச்சியில் மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் பெருமாள்சாமி, முன்னாள் எம்எல்ஏ சின்னப்பன், மாவட்ட மாணவரணி செயலாளர் விக்னேஷ், வட்ட செயலாளர்கள் நவ்ஷாத், ஜெயக்குமார், ரங்கன், பொன்சிங், ராஜ்குமார், முன்னாள் கவுன்சிலர்கள் மெஜிலா, சந்திரா, செல்லப்பா, மாணவர் அணி ரியாஸ், ஐடி விங் அனிஷா, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ராஜா முகமது, பாலஜெயம், சாம்ராஜ், சகாயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு எஸ்.பி. சண்முகநாதனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.