ஒட்டப்பிடாரம் மேற்கு ஒன்றியம் சங்கம்பட்டி கிராமத்தில் நடைபெற்ற முருகதாஸ் இல்ல திருமண விழாவில் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி. சண்முகையா கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எம்எல்ஏவிற்கு பொன்னாடை போர்த்தி மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில் சங்கம்பட்டி கிராமத்தின் கழக செயல்வீரர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.