தூத்துக்குடி நாசரேத் திருமண்டலம் செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் 119 வது ஆலய பிரதிஷ்டை மற்றும் அசன பண்டிகை விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு 20ம் தேதி மற்றும் 21ம் தேதிகளில் கன்வென்ஷன் கூட்டங்கள் நடந்தது. 22ம் தேதி காலை சிறப்பு உபவாச ஜெபம், மாலை பண்டிகை ஆயத்த ஆராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.
23ம் தேதி காலை பண்டிகை மற்றும் திருவிருந்து ஆராதனை நடந்தது. இந்த ஆராதனையில் குப்பாபுரம் சேகர தலைவர் செல்வின்ராஜ் சார்லஸ் செய்தி அளித்தார். அன்று மாலை பொது மக்களுக்கு அசன விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியை செபத்தையாபுரம் சேகர குரு இம்மானுவேல் ஜெபம் செய்து ஆரம்பித்து வைத்தார்.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக SDK. ராஜன், ஜெபச்சந்திரன், S.D. அருண் ஜெபக்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர், ஆலய பொருளாளர் பிரகாஷ் ராஜ்குமார், முன்னாள் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் பொன்சிங் ராஜ், மற்றும் சபை ஒருங்கிணைப்பாளர் ஜார்ஜ், சாந்தசீலன், சாந்தசிங், எமில் டேவிட், SSK. சோபன் பாலசிங், ஆபிரகாம், அரவிந்தராஜ், அருண் தேவதுரை, ஆலய நிர்வாக குழு உறுப்பினர்கள், சபை மக்கள், செபத்தையாபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செபத்தையாபுரம் தெய்வீக உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் அசன பண்டிகை விழா நடந்தது.
தூத்துக்குடி
செபத்தையாபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்தில் அசன பண்டிகை விழா!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மனுவின் மீது உடனடி நடவடிக்கை - தவெக விற்கு கிடைத்த வெற்றி! மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் சார்பில் நன்றி!!
அடுத்த
தூத்துக்குடியில் அதிமுக, பாஜக மக்களுக்கு செய்த துரோகங்கள் குறித்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகம் செய்த 48 வது வார்டு திமுக நிர்வாகிகள்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026