தூத்துக்குடி மாவட்ட சமத்துவ மக்கள் கழகம் சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி. சிலைக்கு, மாவட்டச் செயலாளர் அற்புதராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.



இதில் மாநில தொழிற்சங்க செயலாளர் ஜெபராஜ் டேவிட், மாநில கலை இலக்கிய அணி செயலாளர் வழக்கறிஞர் அந்தோணி பிச்சை ஆகியோர் கலந்து கொண்டு வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் உதயசூரியன், மாவட்ட துணைச் செயலாளர் அருள்ராஜ், தொண்டர் அணி செயலாளர் முத்துசெல்வம், மகளிர் அணி செயலாளர் குருவம்மாள், சந்திரா, வர்த்தக அணி செயலாளர் சிவசு முத்துக்குமார், தொழிலாளர் அணி செயலாளர் சங்கர், மாநகர வர்த்தக அணி செயலாளர் தொம்மை குரூஸ், மாநகர தொண்டர் அணி செயலாளர் காமராஜ், சுந்தர்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.