தூத்துக்குடி 42வது வார்டு பகுதியில் பைப்லைன் பணிகளுக்காக சிமெண்ட் ரோடு உடைக்கப்பட்டுள்ளதால் சாலைகளில் கழிவுநீர் தேங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக தூத்துக்குடி மேற்கு மண்டல தலைவர் அன்னலெட்சுமி கோட்டுராஜா மாநாராட்சி நிர்வாகத்திற்கு விடுத்துள்ள கோரிக்கை மனுவில், தூத்துக்குடி 42வது வார்டு மேல சண்முகபுரம் பெருமாள் தெரு, வண்ணார் தெருக்களில் கடந்த 10 தினங்களாக கருப்பு பைப்லைன் போடப்பட்டு வருகிறது. இதற்காக சிமெண்ட் ரோடு தார் ரோடுகள் முழுமையாக உடைக்கப்பட்டு பைப்லைன் பதித்துள்ளனர்.
பைப்லைன் பதித்த பின்பும், தோண்டப்பட்ட மணல்களை சரியாக மூடாமல் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். மேலும் ரோடுகளில் உள்ள கான்களில் கற்கள் விழுந்து கிடப்பதால் கழிவு நீர் செல்ல முடியாமல் அப்படியே தேங்கி நிற்கிறது. இந்த நிலை இன்னும் ஒரு நாள் நீடித்தால் ரோடுகளில் கழிவு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் சூழல் உள்ளது.
இதனால் மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு கான்களில் குவிந்து கிடக்கும் கற்களை அகற்றி கழிவுநீர் செல்ல வழிவகை செய்ய வேண்டும். மேலும் தோண்டப்பட்ட ரோடுகளில் மணல்களை போட்டு சரியாக மூடாமல் விட்டு சென்ற பணியை உடனடியாக முழுமையாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் விபத்துக்கள் ஏற்படும் அபாய நிலை உள்ளது. எனவே மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்களின் நலனில் அக்கறை கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
தூத்துக்குடி
42 வது வார்டு பகுதியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணியால், கழிவுநீர் தேங்கும் அபாயம் - நடவடிக்கை எடுக்க மண்டல தலைவர் அன்னலெட்சுமி கோட்டு ராஜா கோரிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை வேலை வாய்ப்பில் தூத்துக்குடி இளைஞர்களுக்கு முக்கியத்துவம் அதிமுக கொறடா கவுன்சிலர் மந்திர மூர்த்தி வலியுறுத்தல்!!
அடுத்த
அதிமுக ஆட்சியல் செய்த தவறுகளையெல்லாம் சரி செய்து வருகிறோம் வளர்ச்சிப் பணிகள் முழுமையாக நடைபெறுகிறது மேயர் ஜெகன்பெரியசாமி தகவல்!!
இதையும் படிக்கலாம்
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026
தூத்துக்குடியில் ரூ.53.70 கோடியில் பக்கிள் ஓடை விரிவாக்கப் பணி தீவிரம்! அடுத்த ஆண்டு ஏப்ரலுக்குள் பணிகள் நிறைவு பெறும் – மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்!!
09 Oct 2026