தூத்துக்குடி போல்டன் புரத்தில் உள்ள லண்டன் வட்டமேசை நாயகர், பழந்தமிழர் திவான் பகதூர் ஐயா இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் உருவச் சிலைக்கு 180 ஆவது நினைவு நாளையொட்டி (18.09.2025) மாலை 4 மணிக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
புரட்சி பாரதம் கட்சி தேசிய தலைவர், K.V. குப்பம் சட்டமன்ற உறுப்பினர், இளம் புரட்சியாளர் டாக்டர் பூவை M. ஜெகன் மூர்த்தியார் ஆணையின்படி, கட்சி முதன்மை செயலாளர் D. ருசேந்திரகுமார் மற்றும் மாநில செயலாளர் பரணி P. மாரி ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, தூத்துக்குடி மாநகர் மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட துணைச் செயலாளர்கள் ஆ. இந்திரன், மு. அந்தோணிசாமி முன்னிலை வகிக்க, மகளிர் அணி செயலாளர் S. சிறு லட்சுமி வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட செய்தி தொடர்பாளர் திரு மு. மணிகண்டன் நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டவர்கள், சமூக நீதி மற்றும் சமத்துவத்திற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய சமூக சீர்திருத்தவாதி இரட்டைமலை சீனிவாசனார் அவர்களின் கொள்கைகளை பின்பற்றி சமூக ஒற்றுமைக்காக பணியாற்றுவோம் என உறுதியெடுத்தனர்.
மாவட்ட செயலாளர் மா. மாரிச்செல்வம் சிலைக்கு மாலை அணிவித்து, உறுதிமொழி வாசித்து, கொள்கை முழக்கத்துடன் சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி
இரட்டைமலை சீனிவாசனாரின் 180ஆவது நினைவு நாளில் புரட்சி பாரதம் கட்சி உறுதிமொழி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை காலம் வரும் முன் VMS நகரில் தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை!!
அடுத்த
முத்துநகர் கடற்கரையில் உலகத் தர நீச்சல்குளம் – தூய்மையான, பசுமையான மாநகரம் உருவாக்க உறுதி : மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026