தூத்துக்குடி ராஜகோபால் நகர் 1வது தெருவில் வசிக்கும் சுந்தர் (தகப்பனார் முருகன்) தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். கடந்த (24.12.2024) அன்று பெருமுடையான் மற்றும் அவரது சகோதரர் இசக்கி ஆகியோர் சுந்தரின் வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தி பொதுப் பாதையில் செல்ல முடியாத வகையில் தடையாக வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்படுகிறது.
இதை பற்றி சுந்தர் கேள்வி கேட்டதற்கு, அந்த இருவரும் சண்டைக்கு வந்து சுந்தரை கம்பால் தாக்கி காயப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, காவல்துறையினர் சமாதானமாக பேசி வழக்கை முடித்து வைத்ததாக தெரிகிறது.
ஆனால் மீண்டும் (25.04.2025) அன்று பெருமுடையான் மற்றும் இசக்கி ஆகியோர் பொதுப் பாதையில் நீர் தேங்கி சிரமம் ஏற்படும் வகையில் நடவடிக்கை எடுக்கவில்லை என சுந்தர் கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று (12.10.2025) மூவருக்கும் இடையே மீண்டும் கடும் தகராறு ஏற்பட்டது. இதில் சுந்தர் மற்றும் அவரது தாய், தந்தை, மனைவி, மகன்கள் ஆகியோர் தாக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உடனே சுந்தர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து சமாதானம் செய்ததாக கூறப்படுகிறது.
“பெருமுடையான் மற்றும் இசக்கி எனை கடுமையாக தாக்கினார்கள். நான் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று சுந்தர் செய்தியாளர் சந்திப்பில் வேதனை தெரிவித்தார்.
சம்பவம் குறித்து சிப்காட் காவல் நிலையம் மேலதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி
“மீண்டும் மீண்டும் தாக்குதல் – காவல்துறை நடவடிக்கை எங்கே?” என வேதனை வெளிப்படுத்திய சுந்தர் குடும்பம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"நரகாசுர திமுக ஆட்சி ஒழியட்டும் – தீபாவளி பிறகு அம்மா ஆட்சி மலரட்டும்!" — ஜெயக்குமார் சாடல்!!
அடுத்த
பாத்திமாநகர் பங்கு பெருவிழா – ஆயர் இவான் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி சிறப்பாக நடைபெற்றது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026