தூத்துக்குடி மாநகரில் பெய்துவரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மடத்தூர் மற்றும் புறவழிச் சாலை அருகிலுள்ள பகுதிகளில் மழைநீர் வெளியேற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகளின் முன்னேற்றத்தை நேரில் பார்வையிட்டு, தேவையான வழிகாட்டுதல்களை வழங்கும் வகையில் மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார். பணிகள் நடைபெறும் இடங்களில் மாநகராட்சி பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து பணிபுரிந்தனர்.
பொதுமக்களின் சிரமம் குறைய, துரித நடவடிக்கை எடுத்து மழைநீர் அகற்றும் பணிகளை விரைவாக முடிக்குமாறு மேயர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மழை காரணமாக எந்த இடத்திலும் பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாநகராட்சி முழு தயார்நிலையில் செயல்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழைநீர் அகற்றும் பணிகள் வேகமாக நடைபெறுகிறது – மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தீபாவளி பண்டிகையில் குழந்தைகள் பாதுகாப்பாக வெடிகள் வெடிக்க வேண்டும் – சகா கலைக்குழு முனைவர் சங்கர் வேண்டுகோள்!!
அடுத்த
மழைநீர் சிக்கல் தீர்க்க தூத்துக்குடி வந்தடைந்த அமைச்சர் கீதாஜீவன் — மழைநீர் தேங்கிய பகுதிகளில் துரித ஆய்வு!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026