தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025 - 2026 ம் நிதியாண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாளையொட்டி (12.09.2025) பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.
பள்ளி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பேச்சு போட்டியில் தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளி 12 ம் வகுப்பு மாணவன் விஷ்ணு முதல் பரிசுக்கும் தூத்துக்குடி எக்ஸ் அன் மேல்நிலைப்பள்ளி 11 ம் வகுப்பு மாணவி தேர்ச்சி பிரியா இரண்டாம் பரிசுக்கும் காயல்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி 7 ம் வகுப்பு மாணவி நயிஸத்துல் மிஸ்ரியா ஹமுரி மூன்றாம் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான இரண்டு சிறப்பு பரிசுகள் தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி ஏழாம் வகுப்பு மாணவி அனிதா மற்றும் தூத்துக்குடி மேலூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி எட்டாம் வகுப்பு மாணவி அக்ஷயா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவர்களுக்கான தந்தை பெரியார் பேச்சுப் போட்டியில் தூத்துக்குடி ஏபிசி மகாலட்சுமி மகளிர் கல்லூரி வேதியியல் மூன்றாம் ஆண்டு மாணவி மகாபாரதி முதல் பரிசுக்கும் கோவில்பட்டி கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கிலம் இளங்கலை இரண்டாம் ஆண்டு மாணவி சுஜா இரண்டாம் பரிசுக்கும் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வணிகவியல் முதுகலை இரண்டாம் ஆண்டு மாணவன் மணிகண்டன் மூன்றாம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு முதல் பரிசு ரூபாய் ஐந்தாயிரம் இரண்டாம் பரிசு ரூபாய் 3000 மூன்றாம் பரிசு ரூபாய் 2000 மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் இருவருக்கும் சிறப்பு பரிசு ரூபாய் 2000 வழங்கப்பட்டது.
தூத்துக்குடி
தந்தை பெரியார் பிறந்த நாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைத்து நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2025 - 2026 ம் நிதி ஆண்டில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளையொட்டி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி நடைபெற்றது!!
அடுத்த
தூத்துக்குடி பாத்திமா நகர் பங்கு சிலுவையா ஆலய திருவிழா இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026