தூத்துக்குடி “அறம் 1 செய்வோம் கல்வி மற்றும் நற்பணி அறக்கட்டளை” சார்பில், ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி தூத்துக்குடி T. சவேரியார்புரம் ஆர்.சி. உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில், தூத்துக்குடி ஹோலி கிராஸ் ஹோம் சயின்ஸ் மகளிர் கல்லூரியின் உணவியல் மற்றும் ஊட்டச்சத்து துறை உதவிப் பேராசிரியர் ஏ. மரிதங்கம், எம்.எஸ்., பி.எச்.டி., மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவு குறித்த விழிப்புணர்வு வகுப்பு நடத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு, அமெரிக்காவில் இருந்து டாக்டர் லாவண்யா குணமாலை அவர்கள் ஆதரவளித்தார். சிறப்பு விருந்தினர்களாக T. சவேரியார்புரம் பங்குத்தந்தை அருட்தந்தை குழந்தை ராஜன், ரெவரன்ட் ஐ. ஜெயச்சந்திரன், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் ராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவ, மாணவியர்களுக்கு ஊட்டச்சத்து உணவுகள் வழங்கப்பட்டு, ஆரோக்கியம் மற்றும் சரியான உணவுப் பழக்கங்களை உருவாக்கும் நோக்கில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
தூத்துக்குடி
ஊட்டச்சத்து உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சி – அறம் 1 செய்வோம் அறக்கட்டளை சார்பில் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
முள்ளக்காட்டில் இலவச கண் பரிசோதனை முகாம் – நூற்றுக்கணக்கானோர் பயன்பெற்றனர்!!
அடுத்த
உடன்குடியில் திமுக மாபெரும் பொதுக்கூட்டம் : “தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்” என உறுதிமொழி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026