தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குபட்பட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த இளைஞர்கள் கிாிக்கெட் உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சிக்கு தேவையான உபகரணங்கள் வழங்க வேண்டும் என்று கோாிக்கை வைத்திருந்தனா்.
இதனையடுத்து எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கில் வைத்து இளைஞர்களுக்கு கிரிக்கெட் உபகரணங்கள் மற்றும் உடற்பயிற்சி உபகரணங்களை வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் வழங்கி பேசுகையில்,
இன்றைய தலைமுறையினா் தான் நாளைய எதிர்காலம் என்பதை கருத்தில் கொண்டு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் ஆட்சியில் நல்ல திட்டங்களை வழங்கி இளைஞர்களுக்கு கல்லூாி படிப்பிற்கு உதவி பின்னா் வேலை வாய்ப்புக்கான திறனாய்வு பயிற்சிகள் என்று பல்வேறு வகையில் அவரது வழியில் துணை முதலமைச்சரும் விளையாட்டு மேம்பாட்டு துறையை ஊக்குவிக்கும் வகையில் எல்லா விளையாட்டு போட்டிகளிலும் பங்கெடுத்து கொள்பவா்களை தேசிய அளவிலும் உலக அளிவிலும் திறமையானவா்களாக உருவாக்குவதற்கும் வேண்டிய உதவிகளை உதயநிதி ஸ்டாலினும் செய்து வருகிறாா்.
இந்த நிலையில் விளையாட்டு உடற்பயிற்சி உடல் ஆரோக்கியம் அனைவருக்கும் முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு நல் வழியில் செல்ல வேண்டும். என்பதற்காக இந்த உபகரணங்கள் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதை நல்ல முறையில் பயன்படுத்தி பயனடைய வேண்டும். அதே நேரத்தில் தமிழக முதலமைச்சருக்கு அனைவரும் ஆதரவாக இருக்க வேண்டும். என்று கேட்டுக் கொண்டாா். பின்னா் 5 சாலையோர வியாபாரிகளுக்கு நிழற்குடையும் அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளரும் மண்டல த்தலைவருமான வக்கீல் பாலகுருசுவாமி, மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கவிதாதேவி, மாவட்ட தகவல்தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் அந்தோணி கண்ணன், நாகராஜன், அருணாதேவி, அயலகஅணி அமைப்பாளா் வக்கீல் கிறிஸ்டோபா் விஜயராஜ், மாநகர இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலா்கள் விஜயகுமாா், ஜெயசீலி, வட்டப்பிரதிநிதி பாஸ்கா், பெருமாள்கோவில் அறங்காவலா் குழு தலைவர் செந்தில்குமாா், மணி அல்பட் உள்பட பலர் கலந்து கொண்டனா்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் அன்னை வேளாங்கண்ணி மாதா கெபி திருவிழாவையொட்டி அசன விருந்தை முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தொடங்கி வைத்தார்!!
அடுத்த
தூத்துக்குடி செய்தியாளர்களின் தாய் 4 ம் ஆண்டு நினைவு நாளையொட்டி முதியோர் இல்லத்தில் அன்னதானம் வழங்கினார்கள்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026