வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இடையறாது கனமழையும் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள நிலையில், வடிகால்கள் வழியாக நீரேற்றம் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட விஎம்எஸ் நகர், திரேஸ்புரம், பாக்கியநாதன்விளை உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியிருந்த மழைநீரை அப்புறப்படுத்தும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரும், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான கீதாஜீவன் அவர்கள் இரவு பகல் என இரு நேரங்களிலும் நேரில் சென்று பார்வையிட்டார்.
அமைச்சர் கீதாஜீவன் அவர்கள், பொதுமக்கள் அசௌகரியம் அடையாமல் மழைநீரை விரைவாக வெளியேற்றுமாறு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதுடன், உடனடியாக மின்மோட்டார்கள் மூலம் நீரை பம்ப் செய்து வெளியேற்றும் பணிகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்தார். மேலும், தேவையான இடங்களில் ஜேசிபி இயந்திரங்களை பயன்படுத்தி மீட்பு மற்றும் நீர்நீக்கம் நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.
இந்த ஆய்வில், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண்சுந்தர், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றியச் செயலாளர் சங்கரன், முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார், வட்டப் பிரதிநிதி பாஸ்கர், மணி, அல்பட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இணைந்து செயல்பட்டனர்.
மக்களின் நலனை முன்னிட்டு மழைநீரால் ஏற்படும் சிக்கல்களை உடனுக்குடன் தீர்க்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழையையும் பொருட்படுத்தாமல் இரவுநேர ஆய்வில் அமைச்சர் கீதாஜீவன் – தேங்கிய நீரை அப்புறப்படுத்த தீவிர நடவடிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை வந்தாலும் மந்தம் இல்லை - மாநகரம் முழுக்க பாயும் பணி!
அடுத்த
“மழைநீர் தேங்காது நகரம் — மேயர் ஜெகன் பொியசாமி இருசக்கரத்தில் நகரை வலம் வந்த ஆய்வு!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026