தூத்துக்குடி சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் “நலம் காக்கும் ஸ்டாலின்” மருத்துவ முகாம் சிறப்பாக நடைபெற்றது.
மக்களின் உடல்நலனை பாதுகாக்கும் நோக்குடன் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிய இந்த மக்கள் நலத் திட்டத்தின் கீழ், திருவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாயர்புரத்தில் இம்முகாம் இன்று நடைபெற்றது.
இந்த முகாமை திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவருமான ஊர்வசி எஸ். அமிர்தராஜ் MLA தொடங்கி வைத்து, மருத்துவ குழுவினரின் பணிகளை பார்வையிட்டார்.
முகாமில் பல்வேறு பிரிவுகளின் மருத்துவர்கள் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, கண் பரிசோதனை உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்டு இலவச மருந்துகள் வழங்கினர். மேலும் சுகாதார விழிப்புணர்வு குறித்தும் மக்களிடம் ஆலோசனை வழங்கப்பட்டது.
நிகழ்வில் பெருமளவிலான மக்கள் கலந்து கொண்டு மருத்துவ முகாமின் மூலம் பயனடைந்தனர். இதனை சிறப்பாக ஏற்பாடு செய்த மருத்துவ குழுவுக்கும் பள்ளி நிர்வாகத்திற்கும் MLA ஊர்வசி அமிர்தராஜ் பாராட்டுத் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மக்கள் அருகில் மருத்துவம் — சாயர்புரத்தில் MLA ஊர்வசி அமிர்தராஜ் தொடங்கி வைத்த “நலம் காக்கும் ஸ்டாலின்” முகாம்!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஒட்டநத்தம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் சண்முகையா எம்எல்ஏ – மக்களிடம் நேரில் கேட்டறிந்தார் அடிப்படை வசதிகள்!!
அடுத்த
மக்களின் கனவை நனவாக்கிய நலதிட்ட நாயகன் – திருவைகுண்டம் எம்எல்ஏ ஊர்வசி அமிர்தராஜ்!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026