தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து பெய்து வரும் மழையினால் தண்ணீர் தேங்காத வகையில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நள்ளிரவில் ஸ்டேட் பேங்க் காலனி முதல் மேட்டுப்பட்டி வரை உள்ள வடிகால்களின் வழியாக மழைநீர் வெளியேறும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின்போது பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார், பகுதி கழக செயலாளரும் மண்டல தலைவருமான தொ.நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர் அந்தோணி மார்ஷலின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பகுதி மக்களிடம் மழைநீர் வெளியேற்றம் குறித்த நிலையை நேரில் அறிந்த மேயர், உடனடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நள்ளிரவில் மழைநீர் வெளியேற்ற பணிகளை மேயர் நேரில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை நீரில் நடந்து சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ – பூப்பாண்டிபுரம் முழுவதும் நீர் வெளியேற்றம் விரைவில்!
அடுத்த
தூத்துக்குடியில் கிழக்கு மண்டல அலுவலக முகாம் – மக்களின் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026