வடகிழக்கு பருவமழை காரணமாக தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் எவ்வாறு முன்னேறி வருகின்றன என்பதை நேரடியாக பார்வையிட தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் பகுதி கழக செயலாளர் மற்றும் மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார், தொமுச மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மாமன்ற உறுப்பினர் ரெங்கசாமி ஆகியோர் இணைந்து ஆய்வில் பங்கேற்றனர்.
மழைநீர் வெளியேற்றும் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில், மேயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வேகமாகவும் முழுமையாகவும் நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு, டி மார்ட் எதிர்புறம், ஆதிபராசக்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெளியேற்றம் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும், பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடி
மழைநீரை விரைவாக வெளியேற்ற அதிரடியாக களத்தில் இறங்கிய மேயர் ஜெகன் பெரியசாமி – எட்டையாபுரம் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
மழை பாதித்த மக்களுக்கு நிம்மதி – அதிவேக நடவடிக்கையில் எம்.சி. சண்முகையா எம்எல்ஏ!!
அடுத்த
“பத்திரிகையாளர்கள் பேனாவை விட்டு போராட்ட மைதானத்துக்கு!”
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026