தூத்துக்குடி தூய மரியன்னை கல்லூரி நூலகக் குழு, ரீடர்ஸ் கிளப் மற்றும் புத்தக வாசிப்பு மன்றம் இணைந்து, “வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு மனித குலத்திற்கு வரப்பிரசாதமா? அச்சுறுத்தலா?” என்ற தலைப்பில் பட்டிமன்றத்தை நடத்தின.



நிகழ்ச்சிக்கு சாத்தூர் எழுத்தாளர் எஸ். காமராஜ் நடுவராக தலைமை வகித்தார். பட்டிமன்ற நிகழ்வை கல்லூரி முதல்வர் சிபானா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். தொடர்ந்து நடைபெற்ற பட்டிமன்றத்தில், வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடுகள், அதன் நன்மைகள், மனிதர்களின் அன்றாட வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படுத்தக் கூடிய தாக்கங்கள் குறித்து மாணவிகள் தங்கள் கருத்துகளை முன்வைத்து சிறப்பாகப் பேசினர்.



நிகழ்ச்சியின் நிறைவில் பங்கேற்ற அனைவருக்கும் நினைவுப் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. புத்தக வாசிப்பு மன்றம் சார்பில் எழுத்தாளர் மாரிமுத்து மற்றும் லாரன்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நூலகர் முனைவர் வினிதா செய்திருந்தார். இதில் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.