தூத்துக்குடி குறுக்குசாலை கீதாஜீவன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான கலை மற்றும் அறிவுத் திறன் போட்டிகள் மிகுந்த உற்சாகத்துடன் நடைபெற்றது.
இந்த போட்டிகளில் தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த சுமார் 15 பள்ளிகளின் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டித் தொடர்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் பேச்சுப் போட்டி, கோலப் போட்டி, வினாடி வினா, நெருப்பின்றி சமையல், நாட்டுப்புற நடனப்போட்டி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இடம்பெற்றன.
இதில் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கிய புனிதவளனார் மேல்நிலைப்பள்ளி, கீழமுடிமண் பள்ளி, மொத்த மதிப்பெண்களில் முதலிடம் பெற்று சுழற்கோப்பையை வென்றது.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி செயலாளர் ஜீவன் ஜேக்கப் தலைமை வகித்து மாணவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். மேலும் அறக்கட்டளை உறுப்பினர்களான சுதன்கீலர், சுதாசுதன், மரு. மகிழ் ஜான், கீர்த்தனாமகிழ் ஆகியோர் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.
போட்டிகளில் பங்கேற்ற மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியதோடு, பள்ளிகளுக்கிடையிலான நட்பு மற்றும் ஒத்துழைப்பையும் மேம்படுத்திய சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்தது.
தூத்துக்குடி
குறுக்குசாலை கீதாஜீவன் கல்லூரியில் பள்ளிகளுக்கிடையிலான கலை மற்றும் அறிவுத் திறன் போட்டிகள் சிறப்பாக நடைபெற்றது!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பாஜக மீனவர் பிரிவு மாநில அளவிலான நிர்வாகிகள் அறிமுக கூட்டம் – முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்!!
அடுத்த
ஜான் பாண்டியனை மரியாதை நிமித்தமாக சந்தித்தார் மக்கள் நல உரிமை அமைப்பாளர் அருணாதேவி ரமேஷ்பாண்டியன்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026