மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாளும், பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு தினமும் இன்று அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், மாவட்ட துணைச் செயலாளர் ராஜ்மோகன் செல்வின் தலைமையில் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து வ.உ.சி. மார்க்கெட் அருகே அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், மாநில பொறியாளர் அணி துணைச் செயலாளர் அன்பழகன், மண்டலத் தலைவர் கலைச்செல்வி, பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் குபேர் இளம்பரிதி, மருத்துவ அணி தலைவர் அருண்குமார், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் அருணாதேவி, மாவட்ட பிரதிநிதிகள் நாராயணன், சக்திவேல், மாநகர வர்த்தக அணி அமைப்பாளர் ஆனந்தசேகர், மாநகர வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் ரூபராஜா, இளைஞர் அணி துணை அமைப்பாளர் ரவி, சுற்றுச்சூழல் அணி துணைத்தலைவர் நைஸ்பரமசிவம், அறங்காவலர் குழுத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் வட்டச் செயலாளர்கள் மூக்கையா, லியோ ஜான்சன், டென்சிங், சுரேஷ், பொன்ராஜ், பொன்னுச்சாமி, கவுன்சிலர்கள் சரவணகுமார், வைதேகி, நாகேஸ்வரி, கந்தசாமி, அந்தோணி பிரகாஷ் மார்ஷலின், பகுதி அணி அமைப்பாளர் ஆனந்தி, துணை அமைப்பாளர் ஜாக்சன், துணைச் செயலாளர் மரியதாஸ், கமலி, திலகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.