அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற உன்னத நோக்கத்தை லட்சியமாகக் கொண்டு (22.08.2025) அன்று செங்கல்பட்டிற்க்கு வருகை தருவதை முன்னிட்டு வரவேற்பு கொடுப்பது பற்றிய ஆலோசனைக் கூட்டம் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட பொறுப்பாளரும் மாநில வர்த்தக அணி செயலாளருமான முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன் முன்னிலையில் காட்டாங்கொளத்தூர் கிழக்கு, மேற்கு, வடக்கு ஒன்றியம், கூடுவாஞ்சேரி, மறைமலை, செங்கல்பட்டு ஆகிய நகர கழகம் சாா்பிலும் தனித்தனியாக ஒவ்வொரு இடத்திலும் நடைபெற்ற கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சர் சித. செல்லப்பாண்டியன் பேசுகையில்,
2026 ல் தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிக்கூட்டணி அமைத்து தமிழகம் முழுவதும் தொகுதி வாாியாக பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடியாரை செங்கல்பட்டில் அனைவரும் ஓன்றினைந்து சிறப்பான வரவேற்பு கொடுக்க வேண்டும் அதற்கு இப்போதே அனைவரும் தயாராகுங்கள் என்று பேசினாா்.
கூட்டத்தில் அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் சின்னையா, துணைச் செயலாளர் நாவலூர் முத்து, செயற்குழு உறுப்பினர் மகளிர் அணி இணைச்செயலாளர் கனிதாசம்பத், காட்டாங்கொளத்தூர் ஒன்றிய செயலாளர்கள் சம்பத்குமார், குணசேகரன், கஜா (எ) கஜேந்திரன், நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர செயலாளர் சீனிவாசன், மறைமலை நகர் நகர செயலாளர் ரவீகுமார், செங்கல்பட்டு நகர செயலாளர் செந்தில்குமார், மற்றும் அனைத்து கழக நிர்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
செங்கல்பட்டுக்கு வரும் 22 ம் தேதி வருகை தரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் பேச்சு!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் முதியோருக்கு செவித்திறன் கருவி - அமைச்சர் கீதாஜீவன் வழங்கினாா்!!
அடுத்த
28 வருடத்திற்கு பிறகு 50 லட்சம் ரூபாய் செலவில் அதி நவீன வசதிகளுடன் ஜொலிக்கவுள்ளது தூத்துக்குடி தெப்பக்குளம் மேயர் ஜெகன் பொியசாமி தகவல்!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026