தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு சார்பில், பண்டிகை காலத்தை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகை உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான மாவட்ட அளவிலான ஆலோசனை மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில், பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார உணவுப் பொருட்களை தயாரிக்கும் போது பின்பற்ற வேண்டிய சுகாதார மற்றும் உணவு பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது. மேலும், பொருட்கள் தயாரிப்பு, சேமிப்பு, போக்குவரத்து மற்றும் விற்பனை ஆகியவற்றில் சுத்தம், தரம், சரியான அடையாளம், காலாவதி தேதி, எடை மற்றும் விலை விவரங்கள் போன்ற சட்டப்பூர்வ நெறிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் மாவட்ட நியமன அலுவலர் அருண் செய்தியாளர்களை சந்தித்து, “பண்டிகை காலங்களில் மக்களின் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடிய தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை நடைபெறாதவாறு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். உணவுப் பொருட்களில் நிறமூட்டிகள், ரசாயனப் பொருட்கள் அல்லது தரமற்ற எண்ணெய்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் சிறப்பு குழுக்கள் ஆய்வு செய்யும். விதிமுறைகளை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,” என தெரிவித்தார்.
அவர் மேலும், “தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து உணவுத் தொழில் நிறுவனங்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரச்சான்றிதழ் (FSSAI) பெற்றிருக்க வேண்டும். மக்கள் உணவு வாங்கும் போது பொருளின் லேபிள், காலாவதி தேதி போன்ற விவரங்களை அவசியம் கவனிக்க வேண்டும்,” எனவும் தெரிவித்தார்.
இந்த விழிப்புணர்வு கூட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள், இனிப்பு மற்றும் காரம் தயாரிப்பாளர் சங்க பிரதிநிதிகள், விற்பனையாளர்கள் மற்றும் தொழில் நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் இனிப்பு, காரம் தயாரிப்பாளர்களுக்கு விழிப்புணர்வு கூட்டம்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
அம்மாவின் வழியில் அதிமுக 54 — நலத்திட்டங்களால் மக்களிடையே ஒளிரட்டும்! : முன்னாள் அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் அழைப்பு!!
அடுத்த
தூய்மைப் பணியாளர்களின் முகத்தில் புன்னகை மலர வைத்த மேயர் ஜெகன் – 2,500 ரூபாய் தீபாவளி போனஸ் வழங்க ஏற்பாடு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026