தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம், மாமன்ற கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால், துணை மேயர் ஜெனிட்டா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தூத்துக்குடி மாநகராட்சி அதிமுக எதிர்கட்சி கொறடாவும், 51 வது வார்டு மாமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் மந்திரமூர்த்தி பேசும் போது தூத்துக்குடி மாநகராட்சியில் இன்று நடைபெறும் இந்த மாமன்ற சாதாரண கூட்டத்தில், 10 வது தீர்மானமான குடிநீர் கட்டணத்தை உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை பதிவு செய்கிறேன். அதோடு, இந்த தீர்மானத்தை ரத்து செய்யவும் வலியுறுத்துகிறேன்.
மேலும், தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட கால்டுவெல் காலனியில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டிடத்தை சில தினங்களுக்கு முன்பு திறந்து வைக்கப்பட்டது. ஆனால், ஏழை எளிய மக்கள் பயன் பெறக்கூடிய இந்த நகர்ப்புற நலவாழ்வு மைய கட்டிடமானது திறக்கப்பட்டு 20 நாட்களே ஆன நிலையில், கட்டிடம் விரிசல் ஏற்பட்டு, கட்டிடத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது.
இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் விதமாக உள்ளது. ஆகவே, உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் கட்டிடத்தின் உறுதி தன்மையை ஆய்வு செய்து, பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி கால்டுவெல் காலனியில் புதிதாக கட்டப்பட்ட நகர்ப்புற நல்வாழ்வு மைய கட்டிடத்தின் உறுதி தன்மையை மாநகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்ய அதிமுக கவுன்சிலர் மந்திரமூர்த்தி வலியுறுத்தல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தூத்துக்குடியில் தவெக "வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு" மற்றும் இரண்டாவது மாநில மாநாடு குறித்து முதற்கட்டமாக ஆட்டோக்களில் விளம்பரங்கள் செய்து அசத்திய அஜிதா ஆக்னல்!!
அடுத்த
தூத்துக்குடி அய்யாசாமி காலனியில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பொதுமக்களுக்கு ஆணைகளை வழங்கிய சண்முகையா எம்.எல்.ஏ!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026
தூத்துக்குடியில் வசந்த் & கோ புதிய கிளை திறப்பு! திறப்பு விழா சலுகையாகத் தங்க நாணயம் இலவசம் – தமிழ்ச்செல்வி வசந்தகுமார் திறந்து வைத்தார்; மேயர் ஜெகன் பெரியசாமி விற்பனையைத் தொடங்கி வைத்தார்!!
09 Oct 2026