தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் உள்ள நாயுடு மகாஜன சங்க கட்டடத்தை ஒட்டி மேற்குப் பகுதியில், சங்கத்திற்கு பாத்தியப்பட்ட 3.5 சென்ட் நிலம் உள்ளது. முன்னாள் காலங்களில் அந்த இடம் நமது சமுதாய மக்கள் ஈமக் கிரியைக்காக பயன்படுத்தி வந்தனர்.
இந்நிலையில், அந்த இடத்தை போலி பட்டா மூலம் அபகரிக்க முயற்சி செய்த பாலகிருஷ்ணன் என்பவருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டு, போலி பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என வருவாய்த் துறையிடம் சங்கத்தின் சார்பில் முறையிடப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து, பட்டாவை ரத்து செய்யக் கூடாது என கூறி பாலகிருஷ்ணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். அந்த வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது. தீர்ப்பு வராத நிலையில், போலி பட்டாவை அடிப்படையாகக் கொண்டு பாலகிருஷ்ணன் மேற்படி 3.5 சென்ட் இடத்தில் செட் அமைக்கும் பணிகளை தொடங்கியுள்ளார்.
நேற்று (15.10.2025) நடைபெற்ற நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட டிரஸ்டிகள் விவேகானந்தன் (மேனேஜிங் டிரஸ்டி), சங்க செயலாளர் ரெங்கசாமி, மோகன், விவேகம் ரமேஷ், செல்லச் சாமி வெங்கடகிருஷ்ணன், ராஜாகாந்தி, குப்புசாமி, ஜெயக்குமார், ஆகியோர் உடனே அதற்கு ஆட்சேபனை தெரிவித்து, செட் அமைக்கும் பணிகளை நேற்று இரவு நிறுத்தினர். இது நமது சங்கத்திற்கு சொந்தமான இடம் என போர்டில் எழுதப்பட்டிருந்ததை பாலகிருஷ்ணன் அழித்துவிட்ட நிலையில், உடனே டிஜிட்டல் பேனர் அமைத்து ஒட்டப்பட்டது.
நமது சமுதாயத்திற்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள இந்த இடத்தை முழுமையாக மீட்டெடுக்க நாயுடு மகாஜன சங்க டிரஸ்ட் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. உறுப்பினர்கள் அனைவரும் இந்த முயற்சிக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குமாறு சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
தூத்துக்குடி
தூத்துக்குடியில் நாயுடு மகாஜன சங்கத்திற்கு சொந்தமான இடத்தை மீட்டெடுக்க நடவடிக்கை!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
“மழை வந்தா மகிழ்ச்சி... ஆனால் பெற்றோர்களுக்கு அதிர்ச்சி!”
அடுத்த
பாஜக தொண்டர்களுக்கு தீபாவளி பரிசு – உற்சாகமாக நடைபெற்ற விழா!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026