தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட கிழக்கு மண்டலத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பொதுமக்கள் முன்வைத்த கோரிக்கையினைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி மட்டக்கடைப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அங்கு பொதுமக்கள் தெரிவித்த பிரச்சினைகளை கவனமாக கேட்டறிந்த மேயர், அந்தப் பகுதியில் தேவையான இடங்களில் வடிகால் கல்வெட்டு அமைத்து தரப்படும் என்பதை உறுதிப்படுத்தினார். “வரும் நாட்களில் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படும்” எனவும் பொதுமக்களுக்கு நம்பிக்கை அளித்தார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் பிரியங்கா, வட்ட கழக செயலாளரும் முன்னாள் மாமன்ற உறுப்பினருமான ரவீந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்த நடவடிக்கை, மக்கள் கோரிக்கைகளுக்கு உடனடி பதில் அளிக்கும் வகையில் மாநகராட்சியின் செயல்திறனை வெளிப்படுத்துவதாக பொதுமக்கள் பாராட்டினர்.
தூத்துக்குடி
மட்டக்கடையில் வடிகால் கல்வெட்டு அமைக்க நடவடிக்கை – மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
செக்காரக்குடியில் மக்களின் கோரிக்கை நிறைவேற்றம் – ஆபத்தான இபி போஸ்ட் மாற்றி அமைத்த MLA சண்முகையாவிற்கு நன்றி!!
அடுத்த
“குடிமக்களுக்கு எப்போதும் துணை நிற்கும் தமிழக அரசு” – கிறிஸ்து அரசு நகர் பகுதியில் மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் ஆய்வு!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026