தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பகுதியில் பொதுமக்களின் உயிர் பாதுகாப்பு கருதி உடனடியாக வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக மருத்துவ அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் யூனியன் தலைவருமான டாக்டர் எஸ்.எம்.ஏ. கோசல்ராம் ராஜா ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
“தூத்துக்குடி மாவட்டத்தில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் ஒன்றாக புதுக்கோட்டை திகழ்கிறது. இப்பகுதியில் பல தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. புதுக்கோட்டையில் அமைந்துள்ள புதிய மேம்பாலம் அருகே முன்பு வேகத்தடைகள் இருந்தன.
பின்னர் தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கப்பட்டபோது, நாட்டின் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் விமான சர்வீஸை துவக்கி வைத்தபோது, அப்பகுதியில் உள்ள அனைத்து வேகத்தடைகளும் அகற்றப்பட்டன. ஆனால் அதன் பின்னர் மீண்டும் அவை அமைக்கப்படவில்லை. இதனால் அப்பகுதியில் அடிக்கடி வாகன விபத்துக்கள் நடைபெற்று, பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும், சாலை பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் உடனடியாக புதுக்கோட்டை புதிய மேம்பாலம் அருகே வேகத்தடைகள் அமைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்,” என கோசல்ராம் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையின் இறுதியில் அவர், “இது அரசின் கவனத்திற்கு உடனடியாக வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி
“உயிர் காக்கும் வேகத்தடைகள் மீண்டும் வேண்டும்!” – புதுக்கோட்டை மக்களுக்காக கோசல்ராம் ராஜா குரல்!!
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
திமுக வெற்றிக்கு மாணவரணி தான் முதுகெலும்பு – அமைச்சர் கீதாஜீவன்!!
அடுத்த
மழை முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம் – ஓம் சாந்தி நகரில் மின் மோட்டார் அறை பணிகளை நேரில் பார்வையிட்ட தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026