தூத்துக்குடி மாநகராட்சி 3வது வார்டு கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில், கவுன்சிலரும் மாநகராட்சி கணக்குக்குழு தலைவருமான தெற்கு மாவட்ட திமுக வர்த்தக அணி துணை அமைப்பாளர் ரெங்கசாமி தலைமையில் தீவிர வாக்கு சேகரிப்பு நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தொமுச முன்னாள் செயலாளர் எஸ்இடிசி முத்துராஜ் தொமுச முன்னாள் தலைவர் பால்ராஜ் ஆகியோர் முன்னிலையில், செல்வராஜ், பாலு, டேவிட் ராஜ், சேவியர், ஜெகதீசன், கலை இலக்கிய அணி முருகேசன், ரத்தினவேல், கோபால், ராஜாமணி, சுப்புராஜ், வீரப்பன், ராஜேஷ், சங்கர் நயினார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பிரசாரத்தை முன்னெடுத்தனர்.
இளைஞர் அணியினர் உற்சாகமாக களமிறங்கி, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தனர். கட்டணமில்லா விடியல் பயணம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், முதலமைச்சரின் காலை உணவு திட்டம், நான் முதல்வன் திட்டம், புதுமைப் பெண் மற்றும் தமிழ் புதல்வன் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடி கல்வி, உதவித்தொகை உயர்வு, இன்னுயிர் காப்போம் 48 திட்டம், அன்புச்சோலை, கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம், கலைஞர் கனவு இல்லம், இலவச வீட்டு மனை பட்டா, உள்ளாட்சியில் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றம், தாயுமானவர் திட்டம், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மேம்பாடு, சொத்து பதிவில் மகளிர்க்கு முன்னுரிமை, விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத்தொகை, “நலம் காக்கும் ஸ்டாலின்” உள்ளிட்ட பல்வேறு சாதனைகள் விரிவாக விளக்கப்பட்டன.
இதன் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராமஜெயத்திற்கு வரும் 23.04.2026 அன்று உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுமாறு பொதுமக்களிடம் தீவிரமாக வாக்கு சேகரிப்பு மேற்கொள்ளப்பட்டது.