தூத்துக்குடி மாநகராட்சி 47வது வார்டு லயன்ஸ் டவுன் பகுதியில் தனிநபர் வழக்கு தொடர்ந்ததன் காரணமாக அப்பகுதியில் உள்ள 57 வீடுகளின் பட்டா ரத்து செய்யப்பட்டு, அவை இடிக்கப்பட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் 2025 ஆம் ஆண்டின் ஏழாவது மாதத்தில் உத்தரவு பிறப்பித்தது.
இந்நிலையில், அப்பகுதி குடியிருப்போர் நீதியையும் நியாயத்தையும் பெறும் நோக்கில் கடந்த 19.09.2025 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று காலை 10 மணி அளவில், அகில இந்திய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு குழு சேர்மன் லஞ்ச ஒழிப்பு பாபு அவர்கள் தூத்துக்குடி லயன்ஸ் டவுன் பகுதிக்கு நேரில் வந்து பாதிக்கப்பட்ட குடியிருப்போருடன் சந்தித்து பேசினார். மக்களின் துயரத்தை கேட்டறிந்த அவர், அவர்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்டு,
“உங்களின் வீடுகளை இடிக்காமல் பாதுகாக்கும் பொறுப்பை நான் ஏற்கிறேன். உங்களுக்காக சட்ட ரீதியிலும் மனித ரீதியிலும் உறுதுணையாக இருப்பேன்” என்று உறுதியளித்தார்.
அவரது இந்த உறுதியால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். அவர்களது நம்பிக்கைக்கும் நலன்களுக்கும் ஆதரவாக லஞ்ச ஒழிப்பு பாபு அவர்கள் அளித்த உறுதி, அப்பகுதி மக்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையின் ஒளியாக திகழ்கிறது.
தூத்துக்குடி
“லயன்ஸ் டவுன் மக்களுக்கு நம்பிக்கையின் ஒளி – வீடுகளை காப்பாற்ற உறுதி கூறிய லஞ்ச ஒழிப்பு பாபு”
Saivel
1 நிமிட வாசிப்பு
முந்தைய
ஆதிபராசக்தி அருள் ஒளியில் — ஆதரவற்றோருக்கு தீப ஒளி பரப்பிய மேல்மருவத்தூர் ஆன்மீக இயக்கம்!
அடுத்த
மழை வந்தாலே வீடுகளில் கழிவு நீர் வெள்ளம்! பூபாலராயர்புரம் 2-வது தெரு மக்களின் கோரிக்கை — உடனடி நடவடிக்கை தேவை!!
இதையும் படிக்கலாம்
தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் புரட்டாசி மஹாளய அமாவாசை: பிரம்மாண்ட மிளகாய் வற்றல் மஹா யாகம்! 16 வகையான அபிஷேகம், சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் பங்கேற்பு!!
10 Oct 2026
தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் தொழிற்சாலை அவசியம்! – அகில இந்திய வர்த்தகத் தொழில் சங்கத் தலைவர் ஜே. ஜேசையா வில்லவராயர் பேட்டி!!
10 Oct 2026
“குடியை ஒழிப்போம்; குழந்தைகளைக் காப்போம்!” – சகா கலை மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முனைவர் சகா சங்கர்!!
10 Oct 2026
தசரா திருவிழா சப்பரங்கள் தடையின்றி செல்ல வழிவகை செய்யப்படும்!சாலைகள் சீரமைப்பு, இடையூறாக உள்ள மரக்கிளைகள் அகற்றம் – தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உறுதி!!
10 Oct 2026